வியாழன், 29 அக்டோபர், 2009

தொட்டு விடும் தூரத்தில்....


எனது புதிய தொகுதி அச்சில்...










(எனது "சிரட்டையும் மண்ணும்" என்ற தொகுதியிலிருந்து...)

தொட்டு விடும் தூரத்தில்
வாழ்க்கையிருக்கு..
அதை பெற்றுவிட
தயக்கம் இன்னும் எதற்கு

கற்று விட நிறைய
மீதமிருக்கு...
கற்பனையில் வாழ்தல்..
சுத்தக்கிறுக்கு...

அற்புதங்கள் நிறைய
மிச்சமிருக்கு...
அத்தனையும் தெரிந்தால்
அச்சம் எதற்க்கு

புத்தகங்கள் நிறைய
மூடிக்கிடக்கு..
புத்திமதி அதற்குள்
கொட்டிக்கிடக்கு...

சின்னச்சிறு உளிதான்
சிற்பம் செதுக்கும்..
சித்திரத்துக்குள்ளும்.
பல நுட்பமிருக்கும்

கொட்டிவிடும் இலைகள்
கோடை வெயிலில்-பின்னர்
பட்டையிலும் பசுமை
மாரி மழையில்.

எட்டி விட முடியாமல்
என்ன இருக்கு..
எச்சில் வலைதானே
சிலந்தி பின்னியிருக்கு..

எட்டி வைக்கும் போதுகளில்
பாதம் சறுக்கும்..
ஏற்றம் உள்ள பாதைகளில்
பள்ளம் இருக்கும்.

வெற்றி பெரும் மனது
வேண்டியிருக்கு
தோல்விகளில் கூட
பல பாடமிருக்கு.

1 கருத்து:

  1. //சின்னச்சிறு உளிதான்
    சிற்பம் செதுக்கும்..
    சித்திரத்துக்குள்ளும்.
    பல நுட்பமிருக்கும் //
    நல்ல வரிகள்...
    உங்கள் கவிதைகள் எல்லாவற்றிற்கும் ஓசை தான் உச்ச அழகை தருகிறது. சொல்லடுக்கு பிரமாதம்

    பதிலளிநீக்கு